சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் இளம்பிள்ளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் புதிய ரேஷன் கடை கட்டிடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 12 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை எஸ்.ஆர். சிவலிங்கம் எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட பொது விநியோக திட்ட துணை பதிவாளர் பாலாஜி, சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.