சேலம் சின்னனூர் அருகே செங்கனூரைச் சேர்ந்த விஜய்குமார் (36) என்பவர், 5 ரோடு பகுதியில் உள்ள டீக்கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த மகாதேஸ்வரன் (53) என்பவரே மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை மீட்டனர்.