சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கரபுரநாதர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தையொட்டி கரபுரநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 3 ஆண்டுகளாக கோவில் பிரகாரத்தை சுற்றி சாமி ஊர்வலம் நடைபெறாமல் இருந்த நிலையில், தற்போது கும்பாபிஷேகம் நடந்ததையொட்டி நந்தி பல்லக்கில் பெரிய நாயகியுடன் கரபுரநாதர் கோவில் பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வந்தார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.