சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளுக்கான வின்ஸ்போர்ட்ஸ்-2025 தடகள போட்டி நடந்தது. விழாவிற்கு விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சரவணன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார். பல்கலைக்கழக துணைவேந்தர் சுதிர் போட்டியை தொடங்கி வைத்தார். விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவர் நல இயக்குனர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.
இந்த விளையாட்டு போட்டியானது நேற்று முடிவடைந்தது. போட்டியில் முதல் இடத்தையும், ஆண் மற்றும் பெண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் விநாயகா மிஷன்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி பெற்றது. ஆண்களுக்கான தடகள போட்டியில் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் கலை, அறிவியல் கல்லூரி 2-வது இடத்தையும், பெண்களுக்கான போட்டியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக்கல்லூரி 2-வது இடத்தையும் பெற்றது. இந்த போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நாகப்பன் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.