வேம்படிதாளம் ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்த கோரிக்கை

84பார்த்தது
வேம்படிதாளம் ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்த கோரிக்கை
தமிழக சட்டசபை குழுவினருக்கு, காமராஜர் மக்கள் கட்சி சேலம் மேற்கு மாவட்ட தலைவர் இளம்பிள்ளை இ. கே. மாணிக்கம் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: -கிராமங்கள்தோறும் கல்வி கூடங்களை திறந்து ஏராளமானவர்களின் வாழ்வு வளம்பெற செய்த காமராஜர் பெயர், சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய பஸ் நிலையத்துக்கு சூட்டப்பட்டு இருந்தது. அவரது பெயர் எடுக்கப்பட்டுள்ளது. 

பஸ் நிலையத்தில் தற்போது வணிக வளாகமும் உள்ளது. எனவே பஸ் நிலையத்துக்கும், வணிக வளாகத்துக்கும் காமராஜர் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும். இடங்கணசாலைக்கு வந்து செல்வோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்படுகின்றனர். எனவே சேலம் மெயின்ரோடு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும். இடங்கணசாலைக்கு வந்து செல்வோர் வேம்படிதாளம் ரெயில்வே மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த பாலமானது குறுகலாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே இந்த பாலத்தை அகலப்படுத்துவதுடன் சாலையை இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும். இதுதொடர்பாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.