நேபாளத்தின் பொக்காராவில் நடைபெற்ற இந்தோ-நேபாளம் சர்வதேச விளையாட்டுப் போட்டியில், சேலம் மல்லூர் சிவம் சிலம்பம் பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 3 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். 4 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் கராத்தே, கபடி, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். குறிப்பாக, 10 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பப் போட்டியில் எம். பரிஷித்ராஜ், ஜெ. யக்சதா தங்கப் பதக்கங்களையும், 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் எஸ். ஜானே தங்கப் பதக்கத்தையும் வென்றனர். மேலும், 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஏ. ஆர். சாய்ரிஷ்நிஷா வெள்ளிப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவர்களை பொதுமக்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.