சேலத்தில் தீக்குளித்த வெள்ளி தொழிலாளி சாவு

58பார்த்தது
சேலத்தில் தீக்குளித்த வெள்ளி தொழிலாளி சாவு
சேலம் சிவதாபுரம் அடுத்த பனங்காடு பகுதியை சேர்ந்தவர் வாசு (வயது 42). வெள்ளிப் பட்டறை தொழிலாளி. இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 3 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். வாசு கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி மது அருந்திவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். 

இதனிடையே, கடந்த 18-ந் தேதி வாசு திடீரென உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று சிகிச்சை பலனின்றி வாசு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி