சேலம்: பிறந்தநாளில் சோகம்.. இளம்பெண் மர்ம சாவு

81பார்த்தது
சேலம்: பிறந்தநாளில் சோகம்.. இளம்பெண் மர்ம சாவு
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் கே. எம். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகள் கனிமொழி (வயது 21). இவருக்கும், கோபிசெட்டிப்பாளையம் படுகபாளையத்தை சேர்ந்த மனோஜ்பிரபு (32) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் கனிமொழி வேலை செய்து வந்தார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கனிமொழி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு பிறந்தநாள் ஆகும்.
இதையடுத்து பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள முருகன் கோவிலுக்கு கனிமொழி சென்று அங்கு சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அதன்பிறகு மாலை வீட்டிற்கு வந்து படுத்தார். பின்னர் இரவு 9 மணியளவில் சாப்பிடுவதற்காக அவரை எழுப்பியபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கனிமொழிக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.
Job Suitcase

Jobs near you