சேலம்: டீ வாங்கி தராததால் வாலிபரை சரமாரியாக தாக்கிய 2 பேர் கைது

71பார்த்தது
சேலம்: டீ வாங்கி தராததால் வாலிபரை சரமாரியாக தாக்கிய 2 பேர் கைது
சேலம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் உள்ளது டீக்கடை. இந்த கடைக்கு வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த டிரைவர் கதிரவன் என்பவர் தனது நண்பர்களான கோகுல்ராஜ், உள்ளிட்ட ஐந்து பேருடன் வந்தார். அப்போது கோகுல்ராஜ் கதிரவனிடம் டீ வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் கதிரவன் டீ வாங்கிக் கொடுக்க மறுத்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ் மற்றும் அவருடன் வந்த கல்பாரப்பட்டி கார்த்திக்குமார், அருண், சுகுமார், கபாலி என்ற மணிகண்டன் ஆகியோர் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்தும் கதிரவனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கதிரவன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றிய புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக்குமார், அருண் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். சுகுமார், கபாலி என்ற மணிகண்டன், கோகுல்ராஜ் ஆகிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you