விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

60பார்த்தது
விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக சேலம் வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் செல்வகுமார் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், கல்லூரி சார்பில் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை எடுத்துரைக்கும் நோக்கில் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் காசோலை வழங்கினார். மேலும் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள கடமானை, கல்லூரியின் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அமைப்பின் மூலம் தத்தெடுக்கப்பட்டது.
தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இதில் அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கி அதிகாரி ரவீந்திரன் கலந்து கொண்டார். முகாமில் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இந்த ரத்தமானது அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், சுற்றுச்சூழல் அமைப்பின் ஆலோசகர் ஸ்ரீவித்யா மற்றும் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி