தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்த ராஜாமணி (42) என்பவர், திருப்பூரில் வேலை செய்து வந்துள்ளார். சொந்த ஊருக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு, மீண்டும் வேலைக்கு திரும்ப வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளார். மகுடஞ்சாவடி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது, ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த ராஜாமணி எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார். இதில் ரயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.