சேலம் அருகே கார் மோதியதில் தொழிலாளி சாவு

64பார்த்தது
சேலம் அருகே கார் மோதியதில் தொழிலாளி சாவு
சேலம் கொண்டலாம்பட்டியை அடுத்த மல்லூர் பகுதி பாலம்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 53), விசைத்தறி தொழிலாளி. நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் வீரபாண்டியில் உள்ள தறி கூடத்தில் இருந்து அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, பின்னர் மீண்டும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீரபாண்டிக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கோவையிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே லோகநாதன் உயிரிழந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி