சேலத்தில் பஸ் மோதி தொழிலாளி பலி

4பார்த்தது
சேலத்தில் பஸ் மோதி தொழிலாளி பலி
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகே வனிச்சம்பட்டியைச் சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி செல்வம் (54), நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் இளம்பிள்ளை நோக்கிச் சென்றபோது, பாப்பாப்பட்டி அருகே எதிரே வந்த தனியார் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி