சேலம்: லாரி உரிமையாளரை தாக்கிய.. வாலிபர் கைது

80பார்த்தது
சேலம்: லாரி உரிமையாளரை தாக்கிய.. வாலிபர் கைது
சேலம் சீலநாயக்கன்பட்டி அழகுநகர் சூரிய கவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 55), லாரி உரிமையாளர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டின் அருகே சிலர் நின்று கொண்டு குடிபோதையில் பேசிக்கொண்டிருந்தனர். இதைபார்த்து சக்திவேல் இங்கு நின்று பேசாதீர்கள் என்று அந்த நபர்களிடம் கூறியுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் சக்திவேலை அங்கிருந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் அர்த்தனாரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அடிதடியில் ஈடுபட்டது மணியனூர் காந்தி நகரை சேர்ந்த சுரேஷ் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.