சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

1பார்த்தது
சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டையைச் சேர்ந்த முதுகலை பல் மருத்துவ மாணவர் கவுதம், சேலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் சீரகாபாடியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். விடுதி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், கிச்சிப்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு (24) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மாணவரின் மோட்டார் சைக்கிளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்துருவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி