சேலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

639பார்த்தது
சேலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் உத்தமசோழபுரம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கூரியர் ஊழியர் பிரபாகரன், முதுகு தண்டுவட பாதிப்பால் ஏற்பட்ட தொடர் வலியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். தனியார் மருத்துவமனையில் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்தும் வலி குறையாததால், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொண்டலாம்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி