சேலம் வேம்படிதாளம் நடுவனேரியை சேர்ந்த பிரபாகரன், கடந்த 11ஆம் தேதி உறவினரை பார்க்க மருத்துவமனைக்கு டூவீலரில் சென்றார். சேனைபாளையம் போலீஸ் செக்போஸ்ட் அருகே சாலை பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் பைக் மோதி நிலை தடுமாறி விழுந்ததில் பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. முதலுதவி அளிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.