சேலம் அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி

933பார்த்தது
சேலம் அருகே டூவீலர் விபத்தில் வாலிபர் பலி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே கானம்பாளையத்தைச் சேர்ந்த தனுஷ் (22) என்பவர், உத்தமசோழபுரம் நோக்கி டூவீலரில் சென்றபோது சாலையோரம் நின்ற வாகனத்தில் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி