
ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரி பா. ம. க. ஆர்ப்பாட்டம்
சேலம்-அரூர் பிரதான சாலையில் அயோத்தியாப்பட்டணம் சந்திப்பில் உள்ள ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன. இதனால், அயோத்தியாப்பட்டணத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பாமக சார்பில் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 25 ஆண்டு கால கோரிக்கையான மேம்பாலம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் காலம் கடத்துவதாக பாமகவினர் கண்டனம் தெரிவித்தனர்.






















