வாழப்பாடி: அத்தனூர் அம்மன் கோயிலில் 20 பவுன் நகைகள் கொள்ளை

54பார்த்தது
வாழப்பாடி: அத்தனூர் அம்மன் கோயிலில் 20 பவுன் நகைகள் கொள்ளை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தில் பழமையான அத்தனூர்அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பூஜைகள் நடப்பது வழக்கம். இந்த கோவில் பூசாரி நேற்று வெள்ளிக்கிழமை காலை கோவிலுக்கு பூஜை செய்ய வந்தபோது, கோவில் கதவுகள், லாக்கர்கள் உடைக்கப்பட்டு அம்மன் உடலில் இருந்த வெள்ளிக்கவசம், கிரீடங்கள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். 

கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடப்பாரையால் கோவில் கதவுகளை உடைத்து அங்குள்ள லாக்கரில் இருந்த தங்க நகைகள், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளிக்கவசம், கிரீடம் உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்தனர். அந்த வகையில் 20 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக கோவில் அமைந்திருப்பதால் 2 கார்களில் வந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி