நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த 8 பேர் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த வேன் நேற்று சேர்வராயன் கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் வந்த 8 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக 3 பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.