சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார மலை கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று ஏற்காடு டவுனில் உள்ள இந்தியன் வங்கி முன்பு ₹5 ஆயிரம் எடுக்க குவிந்தனர். போதிய பணம் கையிருப்பு இல்லை என்று வங்கி ஊழியர்கள் கூறியதால், பெண்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வங்கி வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.