ஏற்காட்டில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

13பார்த்தது
ஏற்காட்டில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ஏற்காட்டில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளை செயலாளர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். சித்ரா எம். எல். ஏ. , ஏற்காடு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இளங்கோவன் பேசுகையில், கட்சி நிர்வாகிகளுக்கு புதிதாக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கி கூறி, சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அரியணையில் அமர்த்த அயராது பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வேட்டி, புடவைகள் வழங்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you