சேலம்: அதிமுக வெற்றிக்கு மண் சோறு சாப்பிட்டு வழிபாடு

838பார்த்தது
சேலம்: அதிமுக வெற்றிக்கு மண் சோறு சாப்பிட்டு வழிபாடு
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாபெரும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என, சேலம் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கேபிள் கிருஷ்ணமூர்த்தி, தனது குடும்பத்தினருடன் ஏற்காடு மாரியம்மன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வாகும்.

தொடர்புடைய செய்தி