சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் 30க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களுக்கு இன்று காலை 11 மணியளவில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மதியம் 1 மணியளவில் வெடிகுண்டு வெடிக்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்ப நாய் ரூபியுடன் வந்து அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். இறுதியில், இந்த மிரட்டல் ஒரு புரளி என்பது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.