ஏற்காட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த சிறுவன் சாவு

4பார்த்தது
ஏற்காட்டில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த சிறுவன் சாவு
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இங்கு வேலை செய்யும் பகுன் சாய்-பில்லா சாய் தம்பதியின் 4 வயது மகன் லிபேடாசாய், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.