வாழப்பாடியில் பெண்ணை தாக்கிய அண்ணன் கைது

15பார்த்தது
வாழப்பாடியில் பெண்ணை தாக்கிய அண்ணன் கைது
வாழப்பாடி அருகே உள்ள திருமனூர் பழனிபுரம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (32) என்பவர், தனது அண்ணன் மணிகண்டனிடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைத்த தங்க நகையை மீட்டு தருமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மணிகண்டன் பரமேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரமேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி