மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா உச்சப்பட்டியைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரான ராஜா (42), நண்பர்களுடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்துள்ளார். தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர், மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. நேற்று காலை கழிவறைக்குச் சென்றபோது திடீரென மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த ராஜா, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.