சேலம் கோட்டை பகுதியில் உள்ள முஸ்லிம்களின் திருமண மண்டபத்தில், அதன் செயலாளர் நவ்மான் உள்பட சிலர் பேசிக்கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சிலர் திடீரென மண்டபத்தில் புகுந்து செயலாளரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல் கட்ட விசாரணையில், செயலாளர் பதவியில் இருந்து நவ்மான் விலக வேண்டும் என்ற வலியுறுத்தலால் இந்த மோதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.