100 நாள் வேலை உறுதிதிட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ. 4,043 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மாவட்டத்தில் 59 இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் காரிப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ. ஆறுமுகம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.