ஏற்காடு கோடை விழாவில் நாய்கள் கண்காட்சி

627பார்த்தது
ஏற்காடு கோடை விழாவில் நாய்கள் கண்காட்சி
ஏற்காடு கோடை விழாவின் மூன்றாம் நாளான நேற்று, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் பங்கேற்றனர். லாப்ராடர், கோல்டன் ரெட்ரீவர், ஜெர்மன் ஷெப்பர்ட், சைபீரியன் ஹஸ்கி போன்ற வெளிநாட்டு இன நாய்களும், கோம்பை, ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற நாட்டு இன நாய்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன. உரிமையாளர்கள் தங்கள் நாய்களைப் பங்குபெறச் செய்தனர்.

தொடர்புடைய செய்தி