வலசையூர் பகுதியில் அதிக மாத்திரைகளை சாப்பிட்ட முதியவர் பலி

1037பார்த்தது
வலசையூர் பகுதியில் அதிக மாத்திரைகளை சாப்பிட்ட முதியவர் பலி
சேலம் அருகே வலசையூர் பகுதியைச் சேர்ந்த வட்டமலை (60) என்ற கூலித்தொழிலாளி, வீட்டில் அதிக மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்தார். உறவினர்களால் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.