ஏற்காட்டில் உள்ள செங்களத்துப்பாடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சுடுகாடு வசதி இல்லை. இது தொடர்பாக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தபோது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் நிறைவேற்றப்படவில்லை. இதனால், தற்போது சட்டசபை தேர்தலையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.