ஊதிய உயர்வு வழங்க கோரி மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
ஊதிய உயர்வு வழங்க கோரி மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம் உடையாம்பட்டி மின் பகிர்மான அலுவலகம் முன்பு மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உயர் அதிகாரிகளுக்கு மட்டும் ஊதிய உயர்வு வழங்கியதை கண்டித்தும், அனைத்து நிலை பணியாளர்களுக்கும் பாரபட்சமின்றி ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.