வாழப்பாடி அருகே கோழிப்பண்ணை கொட்டகையில் தீ விபத்து

1412பார்த்தது
வாழப்பாடி அருகே கோழிப்பண்ணை கொட்டகையில் தீ விபத்து
வாழப்பாடி அருகே சேசன்சாவடி கிழக்குக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி நடராஜன் (47) தனது நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க முடிவு செய்தார். இதற்காக சுமார் 100 அடி நீளத்துக்கும், 22 அடி அகலத்துக்கும் தகர கொட்டகை அமைத்து, நிலத்தை பதப்படுத்தி தேங்காய் நார் உள்ளிட்டவற்றுடன் கூண்டுகள், கோழிகளுக்கு தீவனம் வழங்குவதற்கான உபகரணங்களை வாங்கி வைத்திருந்தார். நேற்று அதிகாலை திடீரென கோழி பண்ணையில் தீவிபத்து ஏற்பட்டு கொட்டகை முழுவதும் எரிந்தது. தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி