காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேருக்கு அபராதம்

4பார்த்தது
காட்டுப்பன்றியை வேட்டையாடிய 5 பேருக்கு அபராதம்
சேலம் மாமாங்கம் பகுதியில் காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சங்ககிரி பகுதியிலும் காட்டுப்பன்றி இறைச்சி விற்ற 3 பேருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்தி