சேலம் புறநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், முன்னாள் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் 94-வது பிறந்தநாள் விழா அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஜி.கே. மூப்பனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள், விவசாயிகளுக்கு பொன்னாடைகள் மற்றும் மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.