சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா

276பார்த்தது
சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள பழமையான கரபுரநாதர் கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்து இன்று குடமுழுக்கு நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு ஆனைமுகன் வழிபாடு, வருணகலச வழிபாடுடன் தொடங்கிய இந்த விழாவில், காலை 9 மணிக்கு மூலவர் கரபுரநாதர், பெரியநாயகி ராஜகோபுரம் மற்றும் திருச்சுற்று தெய்வங்களின் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி