சேலம் உடையாம்பட்டி அருகே வரகம்பாடி கிராமத்தில் சாலையோரம் சிறுத்தை காணப்பட்டதாக லாரி டிரைவர் பொதுமக்களிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வாழப்பாடி வனச்சரகர் அன்னப்பன் தலைமையில் வனத்துறையினர் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுத்தையின் கால் தடங்கள் பதிந்திருப்பதாக சிலர் கூறியதை அடுத்து, நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. தற்போது டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.