எடப்பாடி அடுத்த மொரசப்பட்டி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வெங்கடாசலம் (50) கால் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், நாய் கடித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.