அயோத்தியாப்பட்டணம்: ஏரியில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

1253பார்த்தது
அயோத்தியாப்பட்டணம்: ஏரியில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
அயோத்தியாப்பட்டணம் அருகே அக்ரஹார நாட்டாமங்கலம் ஏரியில் நேற்று அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதந்தது. அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் காரிப்பட்டி போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து அடையாளம் தெரியவில்லை. உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் அடித்துக் கொல்லப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி