வாழப்பாடிஆஸ்பத்திரிக்குள் புகுந்து செவிலியரை தாக்கியவர் கைது

0பார்த்தது
வாழப்பாடிஆஸ்பத்திரிக்குள் புகுந்து செவிலியரை தாக்கியவர் கைது
வாழப்பாடி செல்லியம்மன் நகரைச் சேர்ந்த செவிலியர் சத்யா (39), கடந்த 8 ஆண்டுகளாக சந்திரப்பிள்ளை வலசு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (43) என்பவருடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சத்யாவின் அண்ணன் வேல்முருகனுக்கும் சுரேஷுக்கும் ஏற்பட்ட தகராறில் சுரேஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், சத்யா தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் ஆஸ்பத்திரிக்குச் சென்ற சுரேஷ், அங்கு பணியில் இருந்த சத்யாவிடம் தகராறு செய்து, உடையைப் பிடித்து இழுத்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி