சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே பாமகவின் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் கொடுத்த புகாரின் பேரில் அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேரை ஏத்தாப்பூர் போலீஸார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மேட்டூர் சதாசிவம், மயிலை சிவக்குமார் ஆகியோர் சேலம் எஸ்பியை சந்தித்து, அருள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தனர். பின்னர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.