ஏற்காடு தொழிலாளி வீட்டில் பூட்டு உடைத்து பணம் நகை கொள்ளை

7பார்த்தது
ஏற்காடு தொழிலாளி வீட்டில் பூட்டு உடைத்து பணம் நகை கொள்ளை
ஏற்காடு அருகே உள்ள பட்டிப்பாடி கிராமத்தில் தொழிலாளி அண்ணாதுரை வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரம் திருட்டு போனது. நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றிருந்தபோது இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது. வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை, பீரோ உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் திருடப்பட்டதை அறிந்ததும் ஏற்காடு போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி