சேலம்: கோடை விழா மற்றும் மலர்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

51பார்த்தது
சேலம்: கோடை விழா மற்றும் மலர்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்
சேலம் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஏற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்வார்கள். 

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சமவெளி பகுதிகளில் நிலவும் கோடை வெப்பத்தை தணிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படையெடுப்பார்கள். அப்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட ஏற்காட்டில் கூட்டம் அலைமோதும். கோடை காலத்தில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். விழாவையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். 

அந்த வகையில் இந்தாண்டு ஏற்காடு கோடை விழா-மலர்கண்காட்சி எப்போது நடத்தலாம்? எத்தனை நாட்கள் நடத்தலாம்? என்பது குறித்தும், என்னென்ன கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது? என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி