சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் வலசையூர், குள்ளம்பட்டியில் பா.ஜ.க. சார்பில் 'நாளை நமதே, நாடும் நமதே' என்ற பிரசார கூட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் சித்ரா எம்.எல்.ஏ., த.மா.கா. தலைவர் வக்கீல் செல்வம், வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மணி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர். ஊரக மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தின் இறுதியில் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் கிருபாகரன் நன்றி கூறினார்.