வார இறுதி நாளையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2பார்த்தது
வார இறுதி நாளையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வார இறுதி நாளையொட்டி நேற்று குவிந்தனர். இதன்காரணமாக, ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் பெரும்பாலும் நிரம்பி வழிந்தன. சுற்றுலாப் பயணிகள் குகை கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், அண்ணா பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசித்தனர். மேலும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி