தமிழகத்தில் நடப்பாண்டு கோடை தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் விடுமுறை நாட்களில் மலை பிரதேசங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சனி, ஞாயிறு வார விடுமுறை நாளான நேற்று தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்திருந்தனர்.
இதனால் இங்குள்ள ஓட்டல்கள், ரிசார்ட்களில் ஓரளவு கூட்டம் காணப்பட்டது. இங்குள்ள ஸ்னாக்ஸ் கடைகள், ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் விற்பனை கலைகட்டியது. சுற்றுலா பயணிகள் ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, லேடிஸ் சீட், ஜென்ஸ் காட்சி முனைகள், சேர்வராயன் கோயில், கரடியூர், கிளியூர் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடும்பத்துடன் பொழுதை கழித்தனர். மேலும் ஏரி படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.