சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்

815பார்த்தது
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்
ஏற்காடு கோடை விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளம், ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் ஏற்காடு மலைப்பாதை மற்றும் நகரப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏற்காடு டவுன் பகுதி, ஏரிச்சாலை, அண்ணா பூங்கா சந்திப்பு, படகு இல்லம் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கக்கூடிய அனைத்துச் சாலைகளிலும் மலைப்பாதையிலும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அவதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி