சாலையில் விழுந்தமரம் ஆஸ்பத்திரி, 5கிராமங்கள் இருளில் மூழ்கின

0பார்த்தது
சாலையில் விழுந்தமரம் ஆஸ்பத்திரி, 5கிராமங்கள் இருளில் மூழ்கின
ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் பனிமூட்டம், கடும் குளிர் மற்றும் சாரல் மழையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்று மாலை, ஏற்காடு அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரம் பெய்த கனமழை மற்றும் காற்று காரணமாக ஒரு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் மின் கம்பிகளின் மீது மரம் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் செல்ல முடியாத மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தகவலறிந்து விரைந்த மின்வாரிய அதிகாரிகள், மரத்தை அப்புறப்படுத்தி சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மின் விநியோகத்தை சீர் செய்தனர்.
Job Suitcase

Jobs near you